செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் செயலர் திரு.கே .எச்.கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் திரு.எஸ்.சுந்தரம் இருவரும் ராஜபாளையத்தில் நவம்பர் 13 ,2016 அன்று இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே பயணிகள் மேம்பாட்டுக்குழுவின் குழு உறுப்பினர்
திரு.ஆசீர்வாதம் ஆசாரி அவர்களை நேரில் சந்தித்தனர்.அப்போது செங்கோட்டை ,தென்காசி வட்டார ரயில் பணிகள்,செங்கோட்டை புனலூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்தல்,
செங்கோட்டை வழி இயக்கப்பட வேண்டிய புது ரயில்கள்,
செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பயணிகள் நலப்பணிகள்,செங்கோட்டை விருதுநகர் மற்றும் தென்காசி திருநெல்வேலி வழித்தடங்களை...
more... மின்மயமாக்குதல்,செங்கோட்டைக்கு சென்னையில் இருந்து கோடை கால சிறப்பு ரயில்களை இயக்குதல்,
செங்கோட்டையில் பிட் லைன் வசதி ஏற்படுத்துதல்,சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை திரு.ஆசீர்வாதம் ஆசாரி அவர்களிடம் நேரில் வழங்கி மனுவின் விவரங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.திரு.ஆசீர்வாதம் ஆசாரி அவர்களும் தமது பொன்னான நேரத்தை செங்கோட்டை ரயில் பயணிகளின் கோரிக்கைகளை கேட்பதற்காக ஒதுக்கியது மிக்க பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.செங்கோட்டை மக்களின் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிப்பதாக கூறிய திரு.ஆசீர்வாதம் ஆசாரி அவர்கள் எங்கள் மனுவை தென்னக ரயில்வேயின் உயரதிகாரிகளுக்கு அனுப்பி தொலைபேசி மூலமாகவும் நேரிலும் அதிகாரிகளை வரச்சொல்லியும் ஆவன செய்யுமாறு பணித்தார்.
அவரது இடைவிடா முயற்சியால் தற்போது சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கும் வாரம் ஒரு முறை கோடை கால சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் மாதம்5 ம் தேதி முதல் ஜூன் மாதம் 29 ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.சென்னையில் இருந்து ஏப்ரல் 5 புதன் முதல் ஜூன் 28 வரை ஒவ்வொரு புதனும் இரவு 9 .05 க்கு புறப்பட்டு மறுநாள் வியாழன் காலை 10 .15 க்கு செங்கோட்டைக்கு வந்து சேரும்.அதே போல் செங்கோட்டையில் இருந்து ஏப்ரல் 6 வியாழன் முதல் ஜூன் 29 வரை ஒவ்வொரு வியாழனும் பகல் 2 .20 க்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளி அதிகாலை 3 .45 க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் ரயில் மட்டுமே மாம்பலம் ரயில் நிலையத்திலும் நிற்கும்.இரு வழிகளிலும்
இந்த ரயில்கள் நிற்கும் நிலையங்கள் தென்காசி,சங்கரன்கோவில ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி,விருதுநகர்,ம துரை,
கொடைக்கானல் ரோடு,திண்டுக்கல்,திருச்சி,விருத்தாச்சலம்,
விழுப்புரம்,செங்கல்பட்டு,தாம்பரம்.இந்த ரயில்களின் கட்டணம் தத்கால் கட்டணமாகும்.மூத்த குடிமக்கள் மற்றும் இதர சலுகை கட்டணங்களில் இந்த ரயில்களில் டிக்கட் முன் பதிவு செய்ய இயலாது.சென்னை செங்கோட்டை ரயில் எண் -- 06003. செங்கோட்டை சென்னை ரயில் எண் -- 06004 .
ஒரு இரண்டு அடுக்கு தூங்கும் வசதி A C பெட்டி ,இரண்டு மூன்றடுக்கு தூங்கும் வசதி A C பெட்டி,
12 சாதாரண தூங்கும் வசதி மூன்றடுக்கு பெட்டிகள்,இரண்டு சாதாரண முன்பதிவில்லா மற்றும் லக்கேஜ் பெட்டிகள் ஆக மொத்தம் 17 பெட்டிகள் .
-------------------------------------------------- ---------------------------------
செங்கோட்டை முதல் விருதுநகர் வரை உள்ள ஊர்களில் வாழும் மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்த பணிவன்புடன் வேண்டும் -- செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம்.